பிரபல முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்த சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா.!

dharsha-gupta

மாடலிங் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரியல் ட்ஷோக்கலில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. பிறகு தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது இவ்வாறு இன்னும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட இவர் பிறகு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் தற்போது இவர் அடுத்தடுத்து தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். ஏனென்றால் இவர் குடும்ப பெண்ணாக மட்டுமல்லாமல் கிளாமர் வேடத்திலும் நடிப்பதற்கு தயாராகி உள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் பிரபல நடிகர் பரத்துக்கு ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் பரத் 16 ஆண்டுகள் கழித்து வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் பரதுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்க இருக்கிறாராம் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையிலும் வெளிவரவில்லை என்றாலும் தற்போது தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் ஓரளவுக்கு நம்ப முடிகிறது.

dharsha gupta
dharsha gupta

அதாவது தர்ஷா குப்தா நியூ ஜோடி கம்மிங் சூன் என பதிவிட்டு வரத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். எனவே இவர் பரத்துடன் நடிப்பது உண்மைதான் என தெரிய வருகிறது தற்பொழுது வரையிலும் சின்ன பட்ஜெட் இருக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்த தர்ஷா குப்தா முதன்முறையாக பெரிய நடிகரின் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் எனவே ரசிகர்களை இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்.