இப்பொழுது கோடி கணக்கில் சம்பளம் வாங்கினாலும் அப்பொழுது நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன் என வெளிப்படையாக கூறிய எஸ்.கே சூர்யா..

sj-surya
sj-surya

சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு சில திரைப்படங்களில் நடிகராகவும் இதனை தொடர்ந்து இயக்குனராகவும் பிரபலமடைந்தவர் தான் எஸ்க்ஷகே சூர்யா இவர் இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தனது ஆரம்பகால நினைவுகளை கண்கலங்க பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் எஸ்.ஜே சூர்யா சின்ன சின்ன வாய்ப்புகளை பெற்று வந்தார் மேலும் இவருக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம் ஆனால் இவருக்கு ஹீரோவான லுக் இல்லை என பலரும் நிராகரித்து விட்டார்களாம். இதன் காரணமாக கிடைக்கும் வாய்ப்புகளில் பணியாற்றி வந்துள்ளார் இயக்குனராக ஆக வேண்டுமென முடிவெடுத்துள்ளார் அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளின் அடித்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படத்தினை இயக்கி இதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

மேலும் அஜித் இந்த திரைப்படத்தினை கதையை கேட்டவுன் மிரண்டு போய்விட்டாராம் அதன் பிறகு அஜித் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் எஸ்.ஜே சூர்யா மிகவும் கஷ்டப்படுகிறார் என்பதற்காக கார் ஒன்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினாராம். இதனைத் தொடர்ந்து குஷி திரைப்படத்தினை இயக்கியிருந்தார் இத்திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இவ்வாறு தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே ஆகிய திரைப்படங்களை இயக்கி அதில் தானே நடித்திருந்தார்.ஹீரோவாக நடித்த பலரையும் ஆச்சரியப்படுத்தினார் தொடர்ந்து தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வந்த இவர் பயணம், இறைவி, மான்ஸ்டர், மாநாடு என வெரைட்டியான திரைப்படங்களில் நடித்து வந்தார்.மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தரமான வில்லன் நடிகராக நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் தற்பொழுது விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பழைய நினைவுகளை குறித்து பேசி உள்ளார் அதாவது தனியார் தொலைக்காட்சியாக இவர் கொடுத்திருந்த பேட்டியில் சினிமா தான் வாழ்க்கை என‌ என்றும் வீட்டில் பணம் வாங்காமல் லயோலா கல்லூரியில் என்னுடன் படித்த மாணவனுக்கு சொந்தமான ஹோட்டலில் பில் போடும் வேலை பார்த்தேன். காலை 9:30 மணியில் இருந்து பில் போட்டுவிட்டு மதியம் 2:00மணிக்கு சாப்பிடும் பொழுது அப்படி இருக்கும் என நெகிழ்ச்சியாக பேசிவிட்டு என்ன இருந்தாலும் அந்த நாள் அந்த அனுபவம் அப்படித்தான் எனவும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.