Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 21 படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களின் அடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21வது படத்தின் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே 21 என வைக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை கடந்து வெற்றி பெற்றது. எனவே இதனால் எஸ்கே 21 படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரி உள்ளது. இந்த படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தற்பொழுது கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் படங்கள் அனைத்தும் மாஸ் காட்டி வருகின்றது. அப்படி டான், பிரின்ஸ் போன்ற படங்கள் கலவை விமர்சனங்களை பெற்ற நிலையில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் பெற்றது.
தற்பொழுது இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்த வருகிறார். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சூப்பர் ஹிட் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக எஸ்கே 21 படத்தில் சாய் பல்லவி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்ட நிலையில் இன்று படப்பிடிப்புகளை முடித்துவிட்டு படக்குழுவினர்கள் சென்னை திரும்பி உள்ளனர். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து செய்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.
அப்படி எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரனாக நடித்திருப்பதாகவும் விரைவில் எஸ்கே21 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும் எஸ்கே 21 படத்தின் டைட்டிலுடன் புதிய அப்டேட்டை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.