நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா உலகில் தனது பயணத்தைத் தொடர்ந்த நாளில் இருந்து காமெடி, ஆக்சன், காதல் கலந்த படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் இவரது படங்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்கிறது படம் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் எதிர்பாராத வசூலை அள்ளி விடுகின்றன இதனால் நாளுக்கு நாள் நடிகர் கார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சிவகர்த்திகேயன் கடைசியாக நெல்சன் உடன் கைகோர்த்து “டாக்டர்” என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்றது. வசூலில் 100 கோடி அள்ளியது. நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில்100 கோடியை தொட்ட முதல் படமும் இதுதான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பல படங்களில் நடித்து வந்தாலும்..
எந்த ஒரு படமும் இதுவரை வெளிவராமல் இருக்கிறது அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டான், அயாலன், சிங்க பாதை போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த படங்கள் சூட்டிங் ஒவ்வொன்றாக முடித்து பின் வெளிவரும் என தெரியவருகிறது முதலில் “டான்” படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பக்கம் திசை திரும்பி தனது 20-வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா என்பவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து.
அதனை தொடர்ந்து ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ் டகுபதி SK 20 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அறிவிக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.