SK 20 : வெளிநாட்டு ஹீரோயினை உறுதி செய்த படக்குழு – அதிகாரப்பூர்வமாக வெளிவந்த போஸ்டர்.!

sivakarthikeyan

தமிழ் சினிமா உலகில் காமெடி கலந்த தனது நடிப்பை வெளிப்படுத்தி மெரினா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற அடுத்து அடுத்து அவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் இந்த படத்தில் இவர் கல்லூரி மாணவனாகவும் இவருடன் இணைந்து பிரிய அருள் மோகன், சிவாங்கி போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

அடுத்து சிவகார்த்திகேயனின் 20-வது படத்தை அனுதீப் என்ற இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் அவர் டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக இருந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது.

இவர்களது காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகி வருகிறது. மேலும் இதில் பல ஆக்சன் சீன்களும் இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் வெளிநாடு என பல்வேறு இடங்களில் நடத்தப்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றன.

maria
maria

. இந்த சிவகார்த்திகேயனின் 20வது படத்தில் அவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடிக்க உள்ளார். அதனை உறுதி செய்யும் வகையில் படக்குழுவினர் நடிகை மரியாவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.