சிவகார்த்திகேயன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இவரது கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன அந்தவகையில் டான், அயலான் மற்றும் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இவர் திடீரென தெலுங்கு பக்கமும் அடி எடுத்து வைக்க இருக்கிறார்.
இதனால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அசுர வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் தனது 20-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சித்தூர் மற்றும் ஆந்திராவில் கடும் விரைவாக ஷூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் அதிக படங்கள் கையில் வைத்திருக்கிறார்.
எனவே சீக்கிரம் முடியுங்கள் என படக்குழுவுக்கு கட்டளையும் விட்டுள்ளார் அதன்காரணமாக விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம் சூட்டிங். சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சத்யராஜ் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ஹீரோயின்னாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு மாடல் அழகி ஒருவர் ஹீரோயினாக நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஒரு வாத்தியார் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் புதிய தகவலும் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார் அந்த காமெடி நடிகர் வேறு யாருமல்ல வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
இச்செய்தி பலரையும் தற்போது சிரிப்பு அடைய செய்துள்ளது காமெடி நடிகர் பிரேம்ஜி தற்போது வில்லனாக நடிப்பது எந்த அளவிற்கு மிரட்டும் வகையி்ல் இருக்கும் என்பது பலரின் கேள்வி குறியாக இருக்கிறது. சிலரோ பிரேம்ஜி – க்கு வில்லன் கதாபாத்திரம் சுத்தமாக செட் ஆகாது என விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.