“குஷி” படத்தின் கதையை சொல்ல கூடாத இடத்தில் சொன்ன எஸ்.ஜே. சூர்யா.! இப்ப இருக்கிறது அப்போ இருந்த.. தலைவன் கதி அதோ கதி தான்.

kushi
kushi

சினிமா உலகில் அசிஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகி பின் இயக்குனராக அவதாரம் எடுத்தார் இயக்குனராக வெற்றி கண்ட இவர் திடீரென ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி தற்போது பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான “நெஞ்சம் மறப்பதில்லை” வெளியாகி ஹிட் அடித்து.

இத்திரைப்படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடத்தில் நல்ல பெயரை பெற்றார். மேலும் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறன ஆனால் தமிழ்  சினிமா உலகில் ஒரு கட்டத்தில் இவரது உச்சத்தில் இருந்தது.

இவர் இயக்குனராக அடியெடுத்து வைத்தபோது தொடர் ஹிட் படங்களை கொடுத்து அப்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார் அஜீத்தை வைத்து வாலி என்ற படத்தை கொடுத்தார்.

அதன்பிறகு உடனடியாக விஜயை வைத்து குஷி என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இந்த படம் விஜய் கேரியரில் பெஸ்ட் படமாக மாறியது மேலும் அதிக வசூல் செய்த படங்களில் அப்போது விஜய்யின் குஷி படம் தான் அதிக வசூல். படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் திரையரங்கில் வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் ஆகிறது இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது ஹஸ்டக் #ஒன்றை நிறுவி தற்போது ட்ரெண்டிங்கில் வர வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதை பற்றி தற்போது பார்ப்போம்.

எஸ்.ஜே. சூர்யா குஷி படத்தின் கதையை முதலில் விஜயிடம் சொல்லிவிட்டு நேரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தின் முழு கதையையும் அப்போது சொல்லிவிட்டாராம் மேலும் இந்த கதையை நானே எழுதி இயக்க உள்ளேன் என்றும் அறிவித்தார்.

இந்த செய்தியை அப்பொழுது மிகப்பெரிய அளவில் பரவில்லை அதற்கு முக்கிய காரணம் அப்போது எந்த ஒரு சமூக வலைதளங்களும் இல்லாமல் இருந்தது தான் என கூறப்படுகிறது அப்போது இருந்திருந்தால் இவர் சொன்ன கதையை உடனடியாக வேறு ஒருவர் இந்த படத்தை எடுத்து ஹிட் கொடுத்து இருப்பார் அல்லது இந்த படத்தின் கதை அப்போது எல்லோருக்கும் தெரிந்த பின் இந்த படத்தை எடுத்தால் இந்த படம் வெளிவந்தது தோல்வி அடித்திருக்கும்.

ஆனால் நல்லவேளை அப்பொழுது எந்தசமூக வலைதள பக்கமும் இல்லை என்பது நன்றாகப் போனது அப்படி இருந்திருந்தால் எஸ்.ஜே. சூர்யாவின் கெதி அதோ கதி தான்.