வில்லனாக நடிக்க பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்தி இருக்கும் எஸ்.ஜே. சூர்யா – அதிர்ச்சியாகும் சினிமா துறை.?

s.j.-surya-
s.j.-surya-

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று விட்டால் போதும் உடனடியாக நடிகர்கள் சூட்டோடு சூடாக சம்பளத்தை தாறுமாறாக உயர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் அண்மையில் வெளியான மாநாடு மாநாடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் எஸ் ஜே சூர்யா 4 கோடி சம்பளம் வாங்கி இருந்தாலும் அந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை ருசித்து அதன்பின் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் எஸ் ஜே சூர்யா  இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக மாறியவர்.

ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியை ருசிக்க வில்லை அதே சமயம் இவரது நடிப்பு சரி இல்லை என கூறப்பட்டது அதை உணர்ந்து கொண்ட எஸ். ஜே. சூர்யா சிறு இடைவெளிக்குப் பிறகு தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் நடித்து மிரட்டி வருகிறார்.

அப்படிதான் மாநாடு திரைப்படம் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். மேலும் மாநாடு திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த கதையில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா சுமார் 7 கோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் 3 கோடி ரூபாய் உயர்த்தி தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார் எஸ். ஜே. சூர்யா.