தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் எஸ் ஜே சூர்யா. இவர் அண்மைகாலமாக சினிமா உலகில் படங்களை இயக்குவதை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் ஹீரோ வில்லன் குணச்சிதர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுவதால் எஸ்ஜே சூர்யாவின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு, டான் ஆகிய படங்களில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் அந்த படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் எஸ் ஜே சூர்யா தளபதி 66 மற்றும் ஒரு சில புதிய படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருவதாக கூறப்படுகிறது இதனால் நடிகர் எஸ்.ஜே. சூர்யா செம்ம சந்தோஷத்தில் இருப்பதோடு புதிய படங்களில் நடிப்பதற்காக தனது சம்பளத்தையும் சற்று உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. சினிமா உலகில் வெற்றியை ருசிக்கும் எஸ் ஜே சூர்யா இதுவரை தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
வயது அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இனி எஸ் ஜே சூர்யாவை அப்படியே விட்டால் அது சரிப்பட்டு வராது என குடும்பத்தினரும் உறவினர்களும் முடிவெடுத்துள்ளனர். அதனால் இந்த வருடத்திற்குள் எஸ் ஜே சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அவரது உறவினர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது
மேலும் பெண்ணையும் தேடி வருகின்றனர். வெகு விரைவிலேயே நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெகு விரைவில் வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ நல்ல விஷயம் நடந்தால் சரி என எஸ் ஜே சூர்யா ரசிகர்களும் கூறி வருகின்றனர்.