கமலுக்கு வில்லன் எஸ் ஜே சூர்யாவா.? இதோ அவரே கூறிய தகவல்..

s.j. surya
s.j. surya

Kamal Haasan: கமலஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இதனையடுத்து கமலஹாசனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கமலஹாசன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அப்படி சமீப காலங்களாக அரசியலில் ஈடுபட்டு வந்ததால் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். மேலும் தற்பொழுது தான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அப்படி கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் நடித்திருந்தார் இந்த படம் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவ்வாறு விக்ரம் படத்தினை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்க ரவிவர்மா, ரத்னா வேலு ஒலிப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி‌ சங்கர் உள்ளிட ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில மாதங்களாக இந்த படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் எஸ்.ஜே சூர்யா நேர்காணல் பொழுது, நீங்கள் ஒரு படத்தில் கமலஹாசனுக்கும், மற்றொரு படத்தில் ராம்சரனுக்கும் வில்லனாக நடித்து வருகிறீர்கள்.. தற்பொழுது மார்க் ஆண்டனியில் விஷ்லுக்கு வில்லனாக நடித்துள்ளீர்கள் இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எஸ்.ஜே சூர்யா சூப்பர் தான் இருக்கு.. என்று கூறியுள்ளார். எனவே இதனால் இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது.