மாநாடு படத்திற்கு வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு சம்பளத்தை உயர்த்தும் எஸ் ஜே சூர்யா.? வியப்பில் மற்ற நடிகர்கள்.

sj-surya
sj-surya

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கும் படம் மாநாடு. படம் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்தாலும் மக்களுக்கு புரியும்படி இருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தை சினிமா பிரபலங்களும் கண்டுகளித்து மாநாடு படக்குழுவை வாழ்த்தி வருகின்றனர். ஏன் அன்மையில் கூட பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினர். இயக்குனர் அட்லி மும்பையில் மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட்பிரபு போன் செய்து பேசினார்.

இப்படி பல பிரபலங்கள் இந்த படத்திற்கு நல்லதொரு ரிசல்ட்டை கொடுத்துள்ளனர். மாநாடு திரைப்படம் உலக அளவில் இதுவரை 70 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன இதனால் படக்குழு செம்ம உற்சாகத்தில் இருக்கிறது மேலும் நடிகர்களையும் பாராட்டைப் பெற்று  சந்தோஷத்தின் உச்சியில் இருக்கின்றனர்.

மேலும் இதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் இன்னும் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதிலும் குறிப்பாக சிம்புவைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மாநாடு திரைப்படத்தில் வேற லெவல் இருந்ததால் அவரது மார்க்கெட் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது மாநாடு திரைப்படத்திற்காக எஸ் ஜே சூர்யா சுமார் 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஏனென்றால் இந்த படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது தான் காரணம் என கூறப்படுகிறது தற்போது எஸ்ஜே சூர்யா கடமையை செய் என்ற படத்தில் நடிக்கிறார் அதை தொடர்ந்து அவர் மனிதன், டான், பொம்மை போன்ற பல்வேறு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.