தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் சிம்பு இவர் பிரபல முன்னணி நடிகர் டி ஆர் ராஜேந்திரன் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நடிகர் சிம்பு தான் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே நடிப்பில் மிக அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சிம்பு அதன் பிறகு வளரவளர கதாநாயகனாக அவதாரம் எடுத்து விட்டார் அந்த வகையில் பல்வேறு இவர் கதாநாயகனாக நடித்து மாபெரும் ஹிட் கொடுத்துள்ளார்.
ஆனால் சமீபகாலமாக நடிகர் சிம்பு சரியாக படப்பிடிப்பு தளத்திற்கு வருவதன் காரணமாகவும் தயாரிப்பாளர்களிடம் தரக்குறைவாக பேசுவது காரணமாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன இதன் காரணமாக அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வந்தார்.
பின்னர் அந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கிய நிலையில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாகக் கலைத்துவிட்டு பழைய சிம்பு போல ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் காட்சியளித்தார்.
இவ்வாறு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்த நடித்த திரைப்படம் தான் மாநாடு இத்திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது தான் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் வெளியிட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
அந்த வகையில் இத் திரைப்படமானது வருகின்ற 25 ஆம் தேதி வெளியிடப்போவதாக கூறி உள்ளார்கள். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் இந்தப் படத்தினைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.
அந்தவகையில் நடிகர் எஸ் ஜே சூர்யா தான் மாநாடு திரைப்படத்தில் நடித்த பொழுது பேசிய வசனத்தை மேடையில் பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலானது மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிரி விட்டது.