தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா அதன் பிறகு நடிகர் விஜய் வைத்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.
அதைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவர்கள் பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் மேலும் ஒரு சில திரைப்படங்களில் அவரை இயக்கி நடித்துள்ளார். அதன் பிறகு அவர் இயக்கம் சில திரைப்படங்கள் சரிவர ஓடாத காரணத்தால் சினிமாவில் இருந்து சிறிது ஆண்டுகள் விலகி இருந்தார்.
அதன் பிறகு மீண்டும் நடிகராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா அவர்கள் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் இவர் நடிப்பில் வெளியான மாநாடு, டான் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது மட்டுமல்லாமல் இவர் இயக்குனராக இழந்த மார்க்கெட்டை நடிகராக பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் மீண்டும் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளாராம் அதாவது தற்போது ஒரு படத்தை நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்க உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தால் அந்த படத்திற்கு கில்லர் என்று மிரட்டலான டைட்டிலை வைத்துள்ளதாக கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கதாநாயகிக்கு ஒரு நல்ல கான்செப்ட் இருக்கிறது என்றும் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்றும் எஸ் ஜே சூர்யா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இவர் இயக்கிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும் நடிகராக தற்போது சினிமாவில் தனது இடத்தை மீண்டும் பிடித்துள்ளார் இதனால் நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு பல ரசிகர்கள் ஆதரவு கிடைத்து வருகின்றது இந்த நிலையில் தற்போது படத்தை இயக்கப் போவது தெரிந்து அந்தப் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.