அஜித் சார் மாதிரி பெருந்தன்மையா நடந்திருப்பேனா எனக்கு தெரியவில்லை – கண்கலங்கிய எஸ் ஜே சூர்யா

Sj Surya
Sj Surya

Ajith : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருபவர் எஸ் ஜே சூர்யா இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டுமே 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் sj சூர்யாவை ஆரம்பத்தில் வளர்த்து விட்டவர் அஜித். பழசை மறக்காத எஸ் ஜே சூர்யாவும் பல மேடைகளில் அஜித் பற்றி பெருமையாக பேசி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா அஜித்தை பற்றி பேசியது தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. வாலி சூட்டிங் தொடங்கும் முன்னர் நான் ரொம்ப மோசமான காஸ்ட்யூமில் இருந்து உள்ளேன் பட்டன் இல்லாத சட்டை தைத்து போட்ட செருப்பு இருப்பேன்.

ஆனால் அஜித் அதை எல்லாம் ஒரு பொருட்டாக பார்க்காமல் எல்லோர் முன்னிலையிலும் என்மேல் கை போட்டு இவர்தான் என்னோட அடுத்த பட டைரக்டர் என அறிமுகப்படுத்தி வைப்பாராம் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த எச் ஜே சூர்யா நான் ஆக இருந்தால் அஜித் சார் மாதிரி பெருந்தன்மையாக நடந்திருப்பேனா எனக்கு தெரியவில்லை ஆனால் அஜித் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது.

அவர் என்னோட வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர் ஆசை படத்தின் பொழுதே அவர் எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார் அப்படி அவர் கொடுத்த வாழ்வு தான் இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என எஸ் ஜே சூர்யா கண்கலங்கும் படி பேசி உள்ளார்.