தமிழ் சினிமாவில் இதுவரை துளிக்கூட தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. இவர் ஒரு இயக்குனர் மட்டுமின்றி திரைப் படத்தில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனையும் வெளிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தை இயக்கிய தான் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடித்திருப்பார்கள். மேலும் இத்தனை படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார்.
இவ்வாறு தான் இயக்கிய முதல் திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த எஸ் ஜே சூர்யா அதன் பிறகு தான் இயக்கும் திரைப்படத்தில் முள்ள கதைகள் வெவ்வேறு கதைகள் உள்ள அளவிற்கு அதை இயக்க ஆரம்பித்தார். என்னதான் இவர் பல திரைப் படங்களை இயக்கியிருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படம் என்றால் அது வாலி திரைப்படம் தான்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தல அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் போனிகபூர் அவர்கள்தான் வாங்கியுள்ளார். ஆனால் ஹிந்தியில் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய கூடாது என எஸ் ஜே சூர்யா அதற்கு தடை விதித்துள்ளார்.
இதன் மூலமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது தொடர்ந்து இந்த வழக்கு போனி கபூருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூரியா வாலி ரீமிக்ஸ் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உள்ளாராம்.