நான் அந்த மாறி பையன் கிடையாது..! ரசிகர்களின் வேண்டுகோளுக்கு பதில்கொடுத்த sj சூர்யா..!

sj-surya

sj surya latest speech viral in twitter: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்பவர் தான் எஸ் ஜே சூர்யா.  இவர் நடித்து இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆரம்ப காலகட்டத்தில் இவர் இயக்கிய வாலி,குஷி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இவருக்கென பெயரை பெற்றுத்தந்தது. இத்திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான பிறகு கதாநாயகனாக நியூ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இத்திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியானது.இவரே இயக்கி இவர் நடித்த முதல் திரைப்படம் இதுதான்.இத் திரைப்படத்தில் நடிகையாக சிம்ரன், தேவயானி, கிரண் என பல நடிகைகள் நடத்தி இருக்கிறார்கள்.மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

மேலும் இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இத்திரைப்படத்திற்கான ஒரு சில விஷயங்களை பற்றி தற்பொழுது எஸ் ஜே சூர்யா அவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது இத்திரைப்படத்தில் முதன்முதலில் நடிகராக தல அஜித் அவர்கள் தான் நடிக்க இருந்ததாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இத்திரைபடத்திற்காக தல அஜித் அவர்கள் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இத் திரைப்படத்தில் நடிகையாக ஜோதிகா அவர்கள்தான் நடிக்க இருந்தார் என்று கூறினார்.

இதற்கிடையில் தல அஜித் அவர்கள் அட்டகாசம் மற்றும் ஜனா ஆகிய இரண்டு திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வந்த காரணத்தினால் இத்திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால்தான் எஸ் ஜே சூர்யா அவர்களே தாமே நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

அதன் பிறகுதான் நடிகையாக சிம்ரன் மற்றும் கிரணை கிளாமரில் களமிறக்கினார். அதேபோல இவரது நடிப்பில் வெளியான கள்வனின் காதலி, வியாபாரி என பல திரைப்படங்கள் இரு அர்த்தங்களில் பேசப்படும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவருடன் நடித்த நடிகை நயன்தாரா,தமன்னா என பல நடிகைகள் மிகவும் கிளாமராகவும் படு ரொமான்ஸ் ஆகவும் நடித்திருக்கிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா.  இந்த நிலையில் நியூ திரைப்படம் வெளியாகி கடந்த பதினேழு ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் ரசிகர்கள் இன்னும் இத்திரைப்படத்தைப் பற்றி ட்விட் செய்து கொண்டு வருகிறார்கள்.

sj-suriya1
sj-suriya1

அப்பொழுது ரசிகர் ஒருவர் நியூ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “மார்க்கண்டேயா” என்ற பாடல் அப்லோட் செய்யுமாறு கேட்டுள்ளார்.  இதற்கு பதிலளித்த எஸ் ஜே சூர்யா இந்தப் பாடல் மிகவும் கிளாமராக இருக்கும் என்ற காரணத்தினால் என்னால் அப்லோட் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதில் நீங்கள் நடித்திருக்கும் உங்களுடைய போர்ஷன் மட்டும் பதிவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.  அதற்கு நடிகர் எஸ் ஜே சூர்யா “அந்த சூரியா வேற இப்ப இருக்கற சூர்யா ரொம்ப நல்ல பையன் ஆயிட்டான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

sj-suriya2

இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வலம் வருகிறது.