தமிழ் சினிமாவில் தோல்வியை துளிகூட சந்திக்காத இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இவர் சமீபத்தில் கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்தான் வெளியிட்டுள்ளார். எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் முதன் முதலாக வாலி என்ற திரைப்படத்தை இயக்கி தான் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் தல அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருப்பார். பொதுவாக எஸ் ஜே சூர்யா தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கம் தான்.
அந்த வகையில் தன்னுடைய உதவி இயக்குனராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றிய சரணுக்கு தொடர்ச்சியாக நான்கு திரைப்பட வாய்ப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் அஜித் படமான ஆசை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது உதவி இயக்குனராக அறிமுகமானவர்தான் எஸ் ஜே சூர்யா.
இவ்வாறு அவருடைய கடின உழைப்பைப் பார்த்த நமது தல அஜித் அவருடன் ஒரு படமாவது பண்ணனும் என உறுதியாக இருந்தாராம் இதன் காரணமாகத்தான் வாலி திரைப்படம் உருவாகியது இதனை எஸ் ஜே சூர்யா வை பல பேட்டிகளில் கூறி உள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே என பல திரைப்படங்களை இயக்கியிருந்த எஸ் எஸ் சூர்யா அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் திருமகன் வியாபாரி கள்வனின் காதலி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார்.
அந்த வகையில் சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கடமையை செய் என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாதி சிங்கமுகம் பாதி எஸ் எஸ் சூர்யா முகம் என இரண்டும் கலந்த கலவையாக இருப்பின் காரணமாக இத்திரைப்படம் ஒரு மிரட்டலான திரைப் படமாக இருக்கும் என அனைவரும் என்னை வருகிறார்கள்.