சமீபகாலமாக எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்று தருவது மட்டுமல்லாமல் தற்போது இவர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவரை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு பல்வேறு இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை இத்திரைப்படம் ஓரளவு விமர்சனத்தை பெற்றிருந்தாலும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடித்து கொண்டிருக்கும் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் எஸ் ஜே சூர்யா அவர்கள் வில்லனாக நடித்து வந்து கொண்டிருக்கிறார். இது தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் ஐஸ்வர்யா வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இவ்வாறு இந்த தொடரை பிரபல கொலைகாரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்தான் இயக்க உள்ளாராம் மேலும் இந்த வெப்ப தொடரானது இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக எடுக்கப் போவதாகவும் அதிக முதலீடு போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த தொடருக்கு திரைப்படம் போல 40 கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது.இதனால் இந்தத் தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்த அதுமட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.
மேலும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கப் போவதாகவும் கூடிய சீக்கிரத்தில் இந்த படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிடப் போவதாகவும் படகுழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.