திடீரென நடிகை அதிதி ஷங்கரை புகழ்ந்து தள்ளிய எஸ் ஜே சூர்யா – உள்ளே மறைந்திருக்கும் செய்தி.

aditi-shankar
aditi-shankar

நடிகர் கார்த்தி எப்பொழுதும் வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் எந்த ஒரு திரைப்படமும் இதுவரை வெளிவரவில்லை. விருமன் திரைப்படத்தில் கிராமத்து கதையில் கார்த்தி நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிசங்கர் ஹீரோயினாக நடித்து உள்ளார் இது அவருக்கு முதல் படமாகும். முதல் படத்திலேயே கார்த்தியுடன் நடித்ததால் இவரது பெயர் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்தப்படத்தில் கஞ்சா பூ கண்ணாலே இந்த பாடலை யுவன் பாடியிருந்தார் இந்த பாடல் மே 25ஆம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது அதற்குள்ளேயே இந்த பாடல் யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று 50 லட்சம் பார்வையாளர்களை தொட உள்ளது.

இந்தப் படத்தின் பாடலை நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா பார்த்தார். அதிதி ஷங்கர் இந்த பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி அசத்தி உள்ளார். அவர் முதல் படத்தில் நடனம் ஆடுவது போலவே தெரியவில்லை அவ்வளவு அருமையாக ஆடி உள்ளார் நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என கூறி புகழ்ந்து பேசினார் எஸ் ஜே சூர்யா.

இதற்கு பதிலளித்த விருமன் பட நடிகை அதிதி ஷங்கர். தலைவரே எனக்கு ஒன்னும் புரியலை தலைவரே… என்னிடம் வார்த்தைகள் இல்லை சார் என குறிப்பிட்டார்.  இதை அறிந்த ரசிகர்கள் நடிகை அதிதி ஷங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.