Mark Antony: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. விஷாலின் கெரியரிலேயே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமாக மார்க் ஆண்டனி கருதப்படுகிறது.
இவ்வாறு இந்த படத்தின் வெற்றியினை படக் குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாடி வரும் நிலையில் இதில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து அசத்தி உள்ளார்.
மேலும் தனக்கு கிடைத்த அனைத்து கேப்புகளிலும் சிக்ஸர் அடித்திருக்கும் எஸ்.ஜே சூர்யா மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக விளங்குகிறார். இவரை அடுத்து விஷாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் மேலும் ரிது வர்மா, சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்பொழுது விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் குவிந்து வருகிறது. இவ்வாறு இந்த படத்தில் நடிப்பதற்காக எஸ்.ஜே சூர்யா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக மிரட்டு இருக்கும் எஸ்.ஜே சூர்யா ரூபாய் 3 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி படம் மொத்தம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் நிலையில் இதனை விட பல மடங்கு அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.