ஏழு வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்ஜே சூர்யா.! எப்படிப்பட்ட கதை தெரியுமா.?

sj suriya
sj suriya

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இவர் இயக்கத்தில் வெளியாகிய வாலி, குஷி ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பாடகர், நடிகர் என பல திறமைகளைக் கொண்டவர்.

அதேபோல் நடிப்பிலும் தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தவர் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகிய நியூ, நண்பன், இறைவி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது மேலும் எஸ் ஜே சூர்யா ஹீரோ, காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் அதன்பிறகு கௌரவத் தோற்றம் வில்லன் ஆகிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்தது ஒவ்வொரு காட்சியிலும் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார் அந்தவகையில் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியது அதன் பிறகு அட்லி இயக்கத்தில் வெளியாகிய மெர்சல் திரைப்படத்திலும் விஜய்க்கு வில்லனாக பட்டையை கிளப்பி இருந்தார்.

மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மாநாடு திரைப்படத்திலும் சிம்புவுக்கு வில்லனாக நடித்திருந்தார். தனக்கு என்ன கேரக்டர் கொடுத்தாலும் அதனை ஏற்று தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து டான் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இவர் இயக்கத்தில் ஏதாவது படம் வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் இந்தநிலையில் இந்த திரைப்படத்திற்கு கதாநாயகி, துணை நடிகர், நடிகர் என அனைத்தையும் தேர்வு செய்ய ஆயத்தம் ஆகி விட்டார்.

விரைவில் கதாநாயகன் கதாநாயகி என அனைத்தையும் வெளியிட காத்துக்கொண்டிருக்கிறார் மேலும் இந்த திரைப்படம் காரை மையமாக வைத்து உருவாக இருக்கிறது இதற்காக ஜெர்மனியிலிருந்து புதிய கார் ஒன்றை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.