Actor Siyan Vikram: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் ஒரு காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பல வேடங்களில் நடிப்பதில் சிவாஜி, கமல்க்கு அடுத்து இவர் தான் அதில் வல்லவர். மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர். இவர் நடிக்கும் படத்திற்காக தன் உடலை மாற்றிக்கொள்வார்.விக்ரம் நடித்த சேது, ஜெமினி, தூள், சாமி, அந்நியன், பிதாமகன், தெய்வத்திருமகள், ஐ, போன்ற படங்கள் இதற்கு உதாரணம் ஆகும்.
தற்போது விக்ரம் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் 20 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் 7 வேடங்களில் தோன்றினார். அதுமட்டுமல்லாமல் விக்ரம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணன் படத்தில் நடித்துவருகிறார்.
தற்பொழுது விக்ரமின் மகன் துருவ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. விக்ரம் தனது மகனின் சினிமா வாழ்க்கையை கவனித்துக் கொள்வதற்காக சினிமாவிலிருந்து விலகுவதாக சமூக வலைத்தளத்தில் சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
தற்போது அதற்கு பதிலளித்த விக்ரம் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என கூறியுள்ளார்.