தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கொரோனா பிரச்சனைக்கு பிறகு ஆறு மாதங்கள் கழித்து தியேட்டர்கள் திறக்கப்பட்டது.தேட்டரில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்குமாறு உத்தரவு போடப்பட்டது.
கொரோனா பிரச்சனையினால் பல மாதங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியானது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது மட்டுமல்லாமல் இப்படம் கொரோனா பிரச்சனைக்கு பிறகு வெளியான முதல் படம் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டர்களுக்கு சென்று இப்படத்தை பார்த்து வந்தார்கள். அந்த வகையில் இப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இப்படம் மட்டும் அல்லாமல் இப்படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் வெளியாகி ஒரு சில மாதங்கள் ஆனாலும் இன்று வரையிலும் இப்படத்தை பற்றி பேசி தான் வருகிறார்கள்.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி இவர்களின் கூட்டணியில் இப்படம் உருவானதால் இருதரப்பு ரசிகர்களும் நல்ல ஆதரவை தந்து வந்தார்கள். இந்நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி தேர்வில் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி எழுதிய தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அந்த மாணவன் முதலில் நான் தியேட்டருக்கு சென்ற அனுபவம் பற்றி கூறுகிறேன் என்று ஆரம்பித்து சமீபத்தில் நான் தியேட்டருக்கு மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அந்தப் படம் மிகவும் சூப்பராக இருந்தது அதை மிகவும் நான் ரசித்தேன். சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாஸ்டர் ஜேடி எப்படி உதவுகிறார் என்பதை அந்தப் படத்தில் மிகவும் அழகாக காண்பித்து இருந்தார்கள்.
மிகவும் முக்கியமாக அப்படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல் இன்றளவும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த படத்தை மீண்டும் ஒரு முறை எனது நண்பர்களுடன் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவ்வாறு அந்த மாணவன் எழுதிய கட்டுரை புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.