கதாநாயகிகள் எவ்வளவு திறமை வைத்து இருந்தாலும் சரி அவை கொஞ்ச நாள் மட்டும் தான் அந்த வகையில் அறிமுகமானபோது மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த பின்னர் இருந்த இடம் தெரியாமல் போன 6 நடிகைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
நடிகை கயல் ஆனந்தி இவர் கயல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே குடும்பபாங்கான கதாபாத்திரம் என்பதன் காரணமாக எளிதில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். பின்னர் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து நமது நடிகை கிளாமரில் இறங்கியும் ஒன்னும் நடக்க வில்லை இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
நடிகை லட்சுமிமேனன் இவர் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கிளாமரில் குதித்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
நித்யா மேனன் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர். என்னதான் திறமை இருந்தும் தற்போது இவருக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க கூட தயார் என்று சொன்னாலும் கூட இவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குனர் கிடையாது.
நடிகை அஞ்சலி இவர் தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் மற்றும் அங்காடித்தெரு போன்ற மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து பல நடிகர்களின் திரைப்படத்தில் கிளாமராகவும் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி இருந்தார். ஆனால் தற்போது வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருகிறார்.
நடிகை வரலட்சுமி இவர் போடா போடி என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் இவ்வாறுதான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஏகத்துக்கு கிளாமர் காட்டி நடித்ததை தொடர்ந்து தற்போது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் அலைமோதி வருகிறார்.
நடிகை சுருதிஹாசன் இவர் உலக நாயகன் கமலஹாசனின் மகள் ஆவார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருந்தாலும் தற்போது இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.