நடிகர் சூர்யா செய்து வரும் ஆறு சைடு பிசினஸ்கள்.! உண்மையை உடைத்த பிரபலம்..

surya
surya

நடிகர் சூர்யா திரைப்படங்களில் நடித்து வருவதையும் தாண்டி சைடு பிசினஸில் மிகவும் ஆர்வம் உடையவர் மேலும் இதன் மூலம் பல கோடி சம்பாதித்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் ஆறு பிசினஸ்கள் செய்து வருகிறார் இதனால் மாதம் தோறும் கோடிக்கணக்கில் லாபத்தையும் பெற்று வருகிறார் இவ்வாறு இந்த தகவலை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா தற்பொழுது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அதே நேரத்தில் சைடு பிசினஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். மேலும் பல வருடங்களாக சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் இது பலருக்கும் உதவியாக இருந்து வருகிறது.

மேலும் சமீப காலங்களாக நடிகர் சூர்யா மிகச்சிறந்த பிசினஸ்மேன்னாக இருந்து வருகிறார். இவ்வாறு சூர்யாவின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய மனைவி ஜோதிகாவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. அதாவது 2டி என்டர்டெயின்மென்ட் இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஜோதிகாவின் பிடிவாதத்திற்காக தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனத்தின் மூலம் 36 வயதினிலே என்ற திரைப்படத்தினை எடுத்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தினை அடுத்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் ஜோதிகா நடிக்க வந்த நிலையில் தற்பொழுது மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிறகு ரியல் எஸ்டேட் தமிழ்நாட்டில் பல இடங்களில் பண்ணை வீடுகளை வாங்கி போட்டு உள்ளார்கள் இதில் நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது மேலும் அதில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வருவதாகவும் தகவல் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து துணி ஏற்றுமதி பிசினஸ் அதாவது வெளிநாட்டு கார்பன்ஸ் ஆரம்பத்தில் ஒரு கார்பன்ஸ் தொழிற்சாலையில் சூர்யா வேலை பார்த்த நிலையில் அதனை மையமாக வைத்து அதில் தெரிந்து கொண்டதை வைத்து பெரிய பிரம்மாண்டமான ரெடிமேட் கார்பன்ஸ் நடத்தி வருகிறார். இதன் மூலம் உற்பத்தியாகும் ஆடைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மேலும் ஏர்போர்ட் பார்க்கிங் ஏலம் எடுக்கும் உரிமையை சூரியா எடுத்துள்ளார். இது முன்பை உள்ளிட்ட இன்னும் சில ஏர்போர்ட் பார்க்கினை எடுத்துள்ளார் சூர்யா  இந்த தகவலும் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவருக்கு சைடு பிசினஸில் பல கோடி வருவதனால் தான் பாலாவுடன் இணைந்து எடுத்த திரைப்படத்தினை பாதிலேயே விட்டுவிட்டார். இதனை அடுத்து கோயம்புத்தூரில் 50 காற்றாலைகளை வைத்துள்ளாராம் அதில் ஒவ்வொரு காற்றாலையின் மதிப்பு 1.15 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. சூர்யா சைடு பிசினஸில் பல கடி சம்பாதித்து வருவதாக கூறியுள்ள இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.