300 கோடி வசூல் செய்து திரையரங்கை அதிரவிட்ட ஆறு திரைப்படங்கள்.! அதை வெறும் ஆறே நாளில் முறியடித்த பொன்னியின் செல்வன்

movies
movies

சினிமாவை பொறுத்த வரை ஒரு நல்ல படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு வசூலிலும் லாபம் பார்க்க வேண்டும் என்ற முக்கிய பொறுப்பும் இருக்கிறது அப்படி வியாபார ரீதியாக வசூலில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த ஆறு படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

எந்திரன்:- இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், மற்றும் பலர் நடித்து இருக்கும் ஒரு மிரட்டலான திரைப்படம் எந்திரன் இந்த திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது மேலும் இந்த திரைப்படம் 132 கோடி முதல் 166 கோடி வரை பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

கபாலி :- இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, தன்ஷிகா, ராதிகா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஒரு அதிரடி திரைப்படம் கபாலி இந்த திரைப்படம் 100 கோடி செலவில் எடுக்கப்பட்டது ஆனால் வசூல் 625 கோடி முதல் 650 கோடி வரை வசூல் செய்துள்ளது.

2.0 :- இயக்குனர் சங்கதி இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0. இந்த திரைப்படம்  500 முதல் 600 கோடி வரை செலவு செய்து உருவாக்கப்பட்டது. இந்தப் படம்  உலகம் முழுவதும் 800 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிகில் :- இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அவர்கள் நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படம் 180 கோடி செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த படம் 300 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

விக்ரம்:- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாஸில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஒரு அதிரடி கேங்ஸ்டர் திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் 150 கோடி செலவில் உருவாக்கப்பட்டது ஆனால் இந்த படம் 442 கோடி வரை வாசல் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் :- இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பலர் நடித்திருக்கு ஒரு வரலாற்று கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் இந்த படம் வெளியாகி ஆறு நாட்களில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.