இந்த ஆண்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆறு படங்கள் மிகவும் மோசமாக தோல்வி அடைந்ததை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
மாறன்:- கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாளவிகா மோகனன் நடித்திருக்கும் திரைப்படம் மாறன். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.
மகான்:- கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மகான் இந்த திரைப்படம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றம் கொடுத்த திரைப்படம்.
வீரபாண்டியபுரம் :- சுந்தர் சி யின் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், நடிப்பில் வெளியான ஒரு கிராமத்து திரைப்படம் வீரபாண்டியபுரம். சுந்தர் சி யின் முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படம் ரசிகர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆனால் இந்த படம் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு தோல்வி அடைந்தது.
கொம்பு வச்ச சிங்கம்டா :- இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோன செபஸ்டின் நடிப்பில் வெளியான திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இந்த படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் மிகவும் அடிவாங்கி தோல்வி அடைந்தது.
சாணி காகிதம் :- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராக நடிப்பில் வெளியான திரைப்படம் சானி காகிதம் இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக கதாநாயகனாக செல்வதாகவன் அறிமுகம் ஆகி இருந்தார் ஆனால் இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு தோல்வியை தந்தது.
ஹே சினாமிகா :- பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் அதிதீ ராவ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹே சினாமிகா. ஏற்கனவே நடிகர் துல்கர் சல்மான் தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஹே சினாமிகா திரைப்படம் வெற்றியடையும் என எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் இந்த படம் கடுமையான விமர்சனத்தை பெற்ற தோல்வி அடைந்தது.