முன்பதிவில் மாஸ் காட்டிய டாப் 5 தமிழ் திரைப்படங்கள்.! லிஸ்டில் ஜெயிலர், லியோ- க்கு எந்த இடம் தெரியுமா.?

leo
leo

Tamil Actors Movie: தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்களும் இந்த படங்களை கொண்டாடி வருகின்றனர். அப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இந்தியாவில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

எனவே இதற்காக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் பொழுது வெளிநாடுகளிலும் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி தற்பொழுது இங்கிலாந்தில் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் செய்த 6 தமிழ் திரைப்படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.

1. ஜெயிலர்: ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மொத்தமாக 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். ஜெயிலர் படம் இங்கிலாந்த் ப்ரீ புக்கிங்கில் மொத்தம் 151.2k வசூல் செய்துள்ளது.

2. பொன்னியின் செல்வன் 2: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வைத்து மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் இங்கிலாந்து பிரீ புக்கிங்கில் மொத்தம் 130.4k வசூல் செய்துள்ளது.

3. லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. லியோ ப்ரீ புக்கிங் 50 நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் மொத்தம் 126.7k விற்கப்பட்டுள்ளது.

4. பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினத்தின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட நிலையில் இதில் இரண்டாவது பாகம் 113.5k வசூல் செய்தது.

5. வாரிசு: வம்சி இயக்கத்தில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்ற வாரிசு திரைப்படம் 102.3k வசூல் செய்தது.

6. விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர்களின் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் இங்கிலாந்தில் 99.4k வசூல் செய்திருக்கிறது.

விஜய்யின் லியோ திரைப்படம் 42 நாட்களுக்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் 24 மணி நேரத்தில் மட்டும் 100 ஆயிரத்தை தாண்டி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.