பிக்பாஸ் வீடா இல்ல.. WWE சண்டை போடற இடமா.. மாறி மாறி அடித்துக் கொண்ட ஷிவின் மற்றும் தனலட்சுமி.. வீடியோவை கண்டு அதிர்ந்த ரசிகர்கள்

bigboss
bigboss

மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் வருடம் தோறும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இதன் ஆறாவது சீசன் தொடங்கி 52 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் போன்ற.. 7 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் இந்த வாரம் அசீம் கேப்டன் பொறுப்பை ஏற்று பிக்பாஸ் வீட்டில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் .

அது சிறப்பாக இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஏலியன்கள் மற்றும் பழங்குடியினர்கள் டாஸ்க் வைத்துள்ளார். இதில் ஏலியன்கள் பழங்குடியினர்களிடம் இருக்கும் செல்வத்தை திருட வேண்டும் அதற்காக பழங்குடியினர்களை ஏலியன்கள் எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.

அதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து விளையாடுகின்றனர் அதில் கடும் வாக்குவாதங்கள் பல ஏற்பட்டு வருகிறது. கடந்த எபிசோடில் கூட அசீம் மற்றும் அமுதவாணன் இடையே ஒரு சண்டை ஏற்பட்டது அது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள ஷிவின் மற்றும் தனலட்சுமி.. ஆகிய இருவருக்கும் குழாய் அடி சண்டை போன்று ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் மாய்ந்து மாய்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..