முன்னணி இயக்குனர் பாரதிராஜாவின் மகன்தான் மனோஜ் பாரதி இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களில் இவரும் ஒருவர்.
தாஜ்மஹால் திரைப்படத்தை தொடர்ந்து சமுத்திரம், கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்த நிலையில் சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகண்டார் மனோஜ், அதன் பிறகு சிறிது காலம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார், படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் இவரின் நீண்ட கால ஆசை அதை பலமுறை பேட்டியில் கூறியுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் ஸ்ரீதேவி கமல் நடித்த திரைப்படம் சிவப்பு ரோஜாக்கள், இந்த திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது அப்பொழுது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.
இதன் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக மனோஜ் கூறிவந்தார், சில வருடங்களுக்கு முன்பு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது, பாரதிராஜா தயாரிப்பில் சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார், இந்த இரண்டாம் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.
வயது வந்த பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத நிலையில் அப்பொழுது சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக இயக்க வேண்டும் என மனோஜ் கூறியுள்ளார், சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் கமல் மற்றும் சிம்பு இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது ஆனால் அது அனைத்தும் தவறான தகவல் என கூறினார்.
மேலும் சிவப்பு ரோஜா இரண்டாம் பாகத்தை பற்றி அனைத்தும் முடிவானதும் நானும் எனது தந்தையும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் இந்த நிலையில் மனோஜ் படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இதனை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் உறுதி செய்துள்ளார்.