பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கும் சிவாங்கி..! வட போச்சே..!

shivangi

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதன் காரணமாக இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் தற்போது பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள்தான் தொகுத்து வழங்கி வந்தார்.

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் திரண்டது மட்டுமில்லாமல்.  சமீபத்தில் இந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து விளையாடியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் பிரியங்கா சமீபத்தில்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பதன் காரணமாக வருகின்ற சூப்பர் சிங்கர் எட்டாவது சீசனை இவர் தொகுத்து வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் உடன் இணைந்து சிவாங்கி தொகுத்து வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. சிவாங்கி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

அதே போல இவர் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக தான் அறிமுகமானார் என்று கூட சொல்லலாம் இந்நிலையில் தற்போது இவரை இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது  வியக்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.