இரண்டு வாரமாக குக் வித் கோமாளி செட்டுக்கு வராத சிவாங்கி – ஏன் தெரியுமா.?

sivangi
sivangi

சின்னத்திரையில் மக்கள் பலரும் விரும்பிப் பார்க்கப்பட்டு பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் சற்று வித்தியாசமாக சில தயக்கங்கள் உடன் ஆரம்பித்திருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் சீசனாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அதுபோல இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் பிரபலம் அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாவிலும் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

மேலும் கோமாளியாக தொடர்ந்து மூன்று சீசனிலும் பயணித்து வரும் புகழ், சிவாங்கி போன்ற பலரும் தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக பயணித்து வருகின்றனர் அந்த வகையில் குக் வித் கோமாளி கடந்த மூன்று சீசன்களிலும் கோமாளியாக இருந்துவரும் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் படும் பிரபலம் மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது நடிப்பை தவிர சினிமாவில் பாடல்கள் பாடுவது என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார்கள் இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த இரு வாரங்களாக சிவாங்கி பங்கேற்கவில்லை.

அதனால் இவரது ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ரக்ஷன் சிவாங்கி வராததற்கு காரணம் குறித்து கூறியுள்ளார் அவர் கூறியது சிவாங்கி அவரது அண்ணனின் திருமணத்திற்காக சென்று உள்ளதால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என கூறினார்