விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஷோ சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி வருடம் வருடம் புதிய பாடகர்களை அறிமுகமாகி அவர்களை சினிமாவின் பிரபலமடைய செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த வருடம் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. இவர் பேசுவதற்கு கீச் கீச் என்று இருந்ததால் அனைவரும் இவரை கிண்டல் அடித்தார்கள்.ஆனால் இவர் பாட்டு பாட ஆரம்பித்ததும் செட்டில் உள்ள அனைவரும் வாயைப் பிளந்து பார்த்தார்கள்.
அந்த அளவிற்கு சிவாங்கி மிகவும் சிறப்பாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கி பல திரைப் பிரபலங்களின் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. பொதுவாகவே இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் பலருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் சிவாங்கியும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தில் ஒரு பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தகவல் வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் இன்னொரு முன்னணி நடிகர் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் ஒன்றில் தான் பாட கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளார்.
போற போக்கை பார்த்தால் சிவாங்கி அடுத்ததாக கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட்டானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.