விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
தற்போது விஜய் டிவி டி அர் பி யில் முன்னணி நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் புகழ் மற்றும் ஷிவாங்கியின் காமெடி அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ்க்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் பெருமையாக கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் குக் வித்து கோமாளி ஷோக்களில் இருக்கும் யாராவது ஒருவருக்கு என் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.
அதை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது சிவாங்கிக்கு டான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.