பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கின்றன இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இது முதல் மற்றும் இரண்டாவது சீசன் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றன.
மேலும் இந்த நிகழ்ச்சி எவ்வளவு பிரபலமோ அதுபோல இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் கோமாளிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டமே இருக்கின்றன. அப்படி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொள்ளும் புகழ் பாலா மணிமேகலை சிவாங்கி சுனிதா போன்ற பலரும் சிறப்பாக நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மூன்றாவது சீசனில் கோமாளியாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் சிவாங்கி இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பாடல் பாடி இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒருகட்டத்தில் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் அவரது இன்னசென்ட் ஆன பேச்சின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். மேலும் இவர் வெள்ளித்திரையில் உருவாகிவரும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதைத் தொடர்ந்து சினிமாவில் பட பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார் சிவாங்கி.
இந்த மூன்றாவது குக் வித் கோமாளி சீசனில் கோமாளிகள் பலரும் வாரம் வாரம் புதுப்புது கெட்டப்புகளில் வந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் சிவாங்கி வடிவேலுவின் வில்லி பட கெட்டப்பில் சிவாங்கி தோற்றம் அளிக்க உள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது இதோ அந்த ப்ரோமோ.