தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் தான் சிவகுமார் இவர் பிரபல முன்னணி நடிகர் சூர்யாவின் அப்பா என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்போது நமது நடிகருக்கு வயது முதிர்ந்தாலும் சரி இன்று வரை உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் அதிக அளவு கட்டுப்பாட்டுடன் இருந்து வருகிறார்.
அதேபோல திரையுலகை பொறுத்தவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் கண்ணியமாக நமது நடிகர் வாழ்ந்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் சிவகுமாரின் பழம்பெரும் நடிகையான வைஜெயந்திமாலா உடன் 46 வயது உள்ள ஒரு நடிகையுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்
வைஜெயந்திமாலா தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கர்நாடகா என பல்வேறு சினிமா பக்கங்களிலும் பிரபலமான நடிகை அதுமட்டுமில்லாமல் சங்கீதம் பரதம் என பல்வேறு திறன் அறிந்தவர் அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமார் அவர்கள் வைஜயந்திமாலா மற்றும் சிம்ரன் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியது என்னவென்றால் தளபதி விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடிய ஒரு நடிகை என்றால் அது சிம்ரன்தான் என பெருமையுடன் பேசி உள்ளார் ஆனால் தற்போது அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கொடுத்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார் இந்நிலையில் 60 ஆண்டுகளில் எல்லா லட்சணமும் சிலை வடிக்கும் அழகும் கொண்டவர் என்றால் அது வைஜெயந்திமாலா தான்.
தற்போது அவரை போல அனைத்து குணமும் கொண்ட ஒரு பெண் என்றால் அது சிம்ரன் தான் அவருக்கு அழகான குணம் இருப்பது மட்டுமில்லாமல் தோற்றமும் உண்டு கயல்விழி கண்கள், முத்துப்பல் அணிவகுப்பு, அழகான புருவங்கள் கூர்மையான மூக்கு, நீண்ட தடைகள் என சிம்ரனை வர்ணித்துள்ளார். மேலும் சிம்ரன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என கூறியுள்ளார்.