மாவீரனாக சிவக்கார்த்திகேயன் ஜெயித்தாரா.? இல்லையா.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

maaveeran
maaveeran

maaveeran movie : தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிவரும் நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் மோசமான படமாக அவருக்கு அமைந்தது. இதனால் பெருமளவு சிவக்கார்த்திகேயன் விமர்சனத்திற்கு உள்ளனர். இதனால் அடுத்தடுத்த நல்ல படங்களை கொடுக்க அவர் முடிவு எடுத்ததோடு மட்டுமல்லாமல்  தனது சம்பளத்தையும் குறைத்துக்கொண்டு..

படங்களில் நடிக்க முடிவெடுத்தார் அதன்படி முதலாவதாக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் “மாவீரன்”.  படத்தில் இவருடன் இணைந்து அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு விழா மற்றும் டிரைலர் போன்றவை வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை பெரிய அளவில் ஏற்படுத்திய நிலையில் மாவீரன் படம் ஒரு வழியாக இன்று ஜூலை 14 கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கவர்ந்து இழுத்ததால் ரசிகர்கள் இன்டர்வில் போதே படத்தைப் பற்றி செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர்.

குறிப்பாக ரசிகர்கள் twitter பக்கத்தில் படம் எப்படி இருப்பது என்பது குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த twitter பதிவுகளை நீங்களே பாருங்கள். தரமான சிறப்பான சம்பவம் இதுவரை இன்டர்வெல் வேற லெவல் என பதிவிட்டுள்ளனர்.

மற்றொருவர் மாவீரன் வாட்டிய விசுவல் ட்ரீட் கொளுத்தி போடு பட்டாச என கூறியுள்ளார் மற்றொருவர் மாவீரன் வேற லெவல் 100 பிங்கர்ஸ் பைட் சீன் மரணமாக உள்ளது எனக் கூறி.. சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.