சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைப்போரில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைகின்றனர் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார்.
அண்மைக்காலமாக இவர் நடிக்கும் படங்கள் வெற்றி படங்கள் தான் இப்பொழுது கூட இவரது கையில் அயாலன், மாவீரன், பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன இந்த படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. சினிமா உலகில் எவ்வளவுதான் வெற்றியை பெற்றாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததன.
அதன் காரணமாக இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் ஏற்பட்டன. அதை அடைக்க அவரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார் ஆனால் கடனை அடைக்க முடியாமல் இன்று வரை இருந்து வருகிறார். 100 கோடி கிட்டத்தட்ட கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் சில வருடங்களுக்கு முன்பாக அவர் youtube சேனல் ஒன்றை ஆரம்பித்தார்.
அதில் 2 கோடி வரை முதலீடு செய்து இருந்தார். அதில் அவரது மனைவி இயக்குனராக இருந்தார் தற்போது அந்த சேனல் அதிக சப்ஸ்கிரைப்ர்களை பெற்று உள்ளது youtube சேனலை பிரபல கலைஞர் டிவி நிர்வாகம் 70 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இரண்டு கோடி முதலீட்டில் உருவானது தற்போது 70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் செம சந்தோஷத்தின் இருக்கிறாராம் அவரது கடனையும் அடைத்து விட அதிக வாய்ப்புகள் இருப்பதாக திரையுலகத்தில் பேசி வருகின்றனர். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது