சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தன்னுடைய விடாமுயற்சியினால் தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்பொழுது உள்ள இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற இவர் பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவ்வாறு இவருடைய பேச்சுத் திறமையினால் சினிமாவில் பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்தில் தனுஷுக்கு நெருங்கிய நண்பராக மாறியதால் தனுஷின் 3 திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அதன் பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவ்வாறு திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்றி இவர் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்தார். அந்த வகைகள் மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மனங்கொத்தி பறவை, ரஜினி முருகன் போன்ற அடுத்த அடுத்த ஏராளமான ஹிட் திரைப்படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே சினிமாவில் பிரபலமடைந்தார்.
இவ்வாறு வளர்ந்துள்ள இவர் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு 100 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவருடைய குடும்பத்தினர் அவர் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சிவகார்த்திகேயனின் மகள் ஆதாரனா செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அகத்தியர்ந்தார். மேலும் ஒரு சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக சிவகார்த்திகேயன் போலவே அவருடைய மகனும் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.