தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அண்மைக்காலமாக உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் அளவிற்கு தொடர்பு வெற்றி படங்களை கொடுக்கிறார் அதுவும் அவர் படங்கள் அனைத்தும் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்துகின்றன.
இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இவர் கடைசியாக நடித்த டான், டாக்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் பிரின்ஸ்.. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கினார் சிவக்கார்த்திகேயன் வழக்கம் போல..
தனக்கே உரிய பாணியில் சூப்பராக நடித்தார் மேலும் இவர்களுடன் இணைந்து உக்கரை நாட்டு நடிகை மரியா, சத்யராஜ், சூரி, பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.
இருப்பினும் தொடர்ந்து சூப்பராக ஓடியதின் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்க்கையில் பிரின்ஸ் திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை மட்டுமே 50 கோடி வரை வசூலித்திருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன ஆனால் படக்குழு சைடுல இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை ஆனால் எது எப்படியோ இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.