தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ் போன்ற பலரும் தனது இளம் வயதிலேயே சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டனர். இவர்கள் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் பெரியளவு ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை..
இருந்தாலும் தனது விடாமுயற்சியின் மூலம் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் டாப்பில் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு மாறாக தற்போது தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களுக்கு ஈக்குவலான சிறப்பான படங்களை கொடுத்து நல்ல வசூலை ஈட்டி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர்.
வெள்ளி திரையில் மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அடுத்தடுத்து இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மிக விரைவிலேயே டாப் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியதால் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. பட குழு பிரின்ஸ் படத்தினை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது அதனால் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அண்மையில் பிம்பிலிக்கா பிளாப்பி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரென்ட் ஆகிய நிலையில் படத்தை ரசிகர்கள் வேற லெவலில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதன்படி இந்த படத்தை ஸ்டார் குரூப் நிறுவனம் ஒரு பெரிய தொகையை கொடுத்து படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படி ஒரு வரவேற்பா என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.