தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் சுமாரான வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மிஷ்கின், அதிதி ஷங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். குறிப்பாக மிஷ்கின் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவர் சமீபகாலமாக நல்ல படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் லியோ படத்தை தொடர்ந்து மாவீரன் படத்தில் இவர் நடிப்பது..
இந்த படத்தில் காண எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. மாவீரன் படம் தற்போது டப்பிங் மற்றும் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது படம் ஜூலை 16 ஆம் தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் மாவீரன் திரைப்படம் குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசியுள்ளது வைரலாகி வருகிறது அவர் சொன்னது.. மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும்.
படம் அனைத்து விதமான அம்சங்களையும் கொண்டிருக்கும் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும் இந்த படம் அனைத்தையும் பூர்த்தி செய்யும் அந்த அளவிற்கு படத்தை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து மடோன் அஸ்வின் செதுக்கி உள்ளார் இந்த படத்தில் நான் லோக்கலான வில்லனாக நடித்துள்ளேன் என மிஷ்கின் கூறி இருக்கிறார்.
விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரிலீசுக்கு முன்பே நீங்களே உங்கள் கருத்தை சொல்லி விட்டீர்கள் அப்படி என்றால் நிச்சயம் மாவீரன் திரைப்படம் 100% வெற்றி பெறுவது உறுதி எனக் கூறி கமெண்ட் அடித்து அசததி வருகின்றனர் மேலும் இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.