சிவகார்த்திகேயன் செய்த புதிய சாதனை – அஜித், விஜயால் கூட செய்ய முடியவில்லை..

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை அள்ளி வருபவர் சிவகார்த்திகேயன். இதுவரை 20 திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும் அந்த 20 திரைப்படங்களில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகி உள்ளன.

இதனால் நாளுக்கு நாள் அவரது சினிமா வளர்ச்சி அசுர வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் டாக்டர் , டான் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலை அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது இந்த சாதனையை இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் செய்யவில்லை என கூறப்படுகிறது குறிப்பாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் விஜய் இப்படி ஒரு சாதனையை செய்தது கிடையாதாம்.

தளபதி விஜய் துப்பாக்கி திரைப்படம் 100 கோடியை தொட்டது ஆனால் அதற்கு பிறகு வந்த தலைவா திரைப்படம் 100 கோடியை பெறவில்லை என கூறப்படுகிறது அதுபோல அஜித் மங்காத்தா திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருந்த நிலையில் அடுத்து வந்த பில்லா 2 படம் அதை செய்யத் தவறியது.

தொடர்ந்து 100 கோடி வசூலை அஜித், விஜய் படங்களே ஆரம்ப கட்டத்தில் செய்யவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் செய்து அசத்தியது. வெறும் 12 நாட்கள் மட்டுமே 100 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி  சிவகார்த்திகேயன்.

கேரியரில் மிக முக்கியமான படமாக டான் படம் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் நிச்சயம் சிவகார்த்திகேயன் அஜித், விஜய்க்கு நிகராக வர அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.