முதல் வாரத்திலேயே போட்ட காசை எடுத்த சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் – இத்தனை கோடி வசூலா.?

don
don

நடிகர் சிவகார்த்திகேயன் திரை உலகில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இப்போதுவரையிலும் மக்கள் மற்றும் ரசிகர்களின் நிலைமைக்கு ஏற்ப சரியான நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்கிறார் இவரது படங்களும் முதலில் காமெடி அதன்பின் செண்டிமென்ட் ஆக்ஷன் என இருப்பதால் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுகின்றனர்.

தொடர்ந்து இவரது படங்கள் வெற்றிப் படங்களாகவே இருப்பதால் சிவகார்த்திகேயனின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது அதற்கு ஏற்றார் போல சம்பளத்தையும் உயர்த்தி வருகிறார்.  சிவகார்த்திகேயன் கடைசியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்தார்.

அந்த படம் நூறு கோடிக்கு மேல் வசூல் ஈட்டி புதிய சாதனை படைத்தது அதை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இந்த படம் கடந்த மாதம் மே 13ஆம் தேதி உலக அளவில் ரிலீசானது.

படம்  வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் வசூல் வேட்டை நடத்துகிறது. படம் முதல் நாளே நல்ல வசூலை அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் முதல் வாரத்தில் டான் திரைப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்தது உள்ளது என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி பார்க்கையில் டான் திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருந்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் இந்த படம் 100 கோடியை தொடுவது உறுதி என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.