சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மாவீரன் திரைப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் அப்டேட்டையும் பட குழு அறிவித்துள்ளார்கள். கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்பொழுது sk 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து மறுபுறம் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரிலீஸ்க்கு நேரடியாக இருக்கும் நிலையில் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ்சாக உள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கும் நிலையில் இவர்களை தொடர்ந்து மிஷ்கின், சரிதா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இவர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு எடுத்தது ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்காக மாவீரன் ரிலீஸ் தேதி ஜூலை 14 ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் மாவீரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
இதனை அடுத்து தற்பொழுது மாவீரன் ட்ரெய்லர் பட குழு அறிவித்திருக்கிறார்கள் அந்த வகையில் மாவீரன் ட்ரெய்லர் ஜூலை 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து படக்குழு ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் நீருக்கடியில் இருந்து கத்துவது போல் உருவாகி இருக்கிறது எனவே சிவகார்த்திகேயனின் ட்ரெய்லர் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இவ்வாறு இதனை அடுத்து தனுஷின் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தனுஷ் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு தற்பொழுது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விட மாவீரன் ட்ரெய்லர் அப்டேட் தான் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இவ்வாறு தனது படம் ட்ரெண்டிங்காக வேண்டும் என தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நிலையில் இதே நேரத்தில் சிவகார்த்திகேயனும் மாவீரன் படத்தின் ட்ரைலர்க்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகிறது இவ்வாறு சிவகார்த்திகேயன் தனுஷை தோற்கடித்துள்ளார்.