ரிலீசுக்கு முன்பே கல்லாப்பெட்டியை நிரப்பிய சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் 100 கோடி கிட்டத்தட்ட வசூல்.. வெளிவந்த தகவலால் அதிர்ச்சியான தமிழ் சினிமா.

maveeran-movie
maveeran-movie

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்தவர்கள் ஏராளம் ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகராக ஜொலிக்கின்றனர் அந்த வகையில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் முதலில் மெரினா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு எந்த மாதிரியான கதைக்களம் தனக்கு செட் ஆகும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன்..

தொடர்ந்து காமெடி கலந்த ஆக்சன் படங்களில் நடித்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார் குறிப்பாக இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருந்தாலும் பிரின்ஸ் திரைப்படம் இவருக்கு சுமாரான படமாக இருந்தது.

இதிலிருந்து மீண்டு வர மடோன் அஸ்வினுடன் கூட்டணி அமைத்து மாவீரன் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து உள்ளார் இந்த படம் வெகு விரைவிலேயே ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து அதிதி சங்கர், யோகி பாபு, கவுண்டமணி, சுனில், மிஷ்கின் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி கலந்த ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு 100 கோடிக்கு கிட்டத்தட்ட வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

மாவீரன் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது. netflix மாவீரன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கிறது. தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மொத்தமாக 83 கோடி ரிலீஸ் ஆகும் முன்பே மாவீரன் திரைப்படம் வசூலித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..