சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கடைசி 5 திரைப்படங்களின் வசூல்.! ஓர் பார்வை

Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikryan : குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து அயலான், SK 21 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 5 திரைப்படங்களில் வசூல் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

ஹீரோ : பி எஸ் மித்திரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படம் முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் ஆக்சன் கலந்த படமாக உருவாகிறது படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 40 கோடி வரை வசூல் செய்தது.

டாக்டர் : இயக்குனர் நெல்சன் உடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்மாறுபட்ட நடிப்பை வெளிய படுத்திருப்பார் ஆனால் படத்தில் ஒவ்வொரு சீனுமே நம்மை சிரிக்க வைக்கும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரியங்கா அருள் அருள் மோகன் படம் முழு வந்து  போவார்கள் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

டான்  : சி பி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க  கல்லூரி சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் இருந்தது இதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது மொத்தமாக 112 கோடியை வசூல் செய்து அசத்தியது.

பிரின்ஸ் : அனுதீப் கேவி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி வாத்தியாராக நடித்திருப்பார் படத்தில் காமெடி, காதல் என அனைத்தும் இருந்தாலும் ஏற்கனவே பார்க்க போட்ட போது போலவே இந்த படத்தின் கதை இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கதை ஈடுபடவில்லை இதனால் பிரின்ஸ் திரைப்படம் மொத்தமாகவே 40 அல்லது 45 கோடி வரை தான் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மாவீரன் : மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் முதலில் கோழை ஆளாக நடித்திருப்பார் பின் ஒரு தடவை இவர் கீழே விழுந்த போது மண்டையில் அடிபடும் அதன் பிறகு வேறு ஒருவர் பேசுவது போல் இருக்கும் அதை கேட்டு வில்லன்களை அடிப்பார் படத்தில் காமெடி, ஆக்சன் என சிறப்பாக இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வெற்றி கண்டது ஒட்டு மொத்தமாகவே மாவீரன் திரைப்படம் 89 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.