எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல் இதுதான்.!

prince
prince

தமிழ் சினிமாவில் குறுகிய ஆண்டில் தனக்கான ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை இருக்கு பெற்றது.

டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது பிரண்ட்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டுள்ளனர்.

தீபாவளி அன்று நடிகர் கார்த்தியின் சர்கார் திரைப்படமும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது பிரின்ஸ் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். சிவகார்த்திகேயனின் அனைத்து படங்களும் யு சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது பிரின்ஸ் திரைப்படமும் யு சான்றிதழ்  பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் அதாவது 143 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளி விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது டாக்டர், டான், திரைப்படம் போல இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் உள்ளீட்டா பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்காகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு தீப் இயக்கத்தில் உருவாகி உள்ளது திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.