தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தனியார் தொலைக்காட்சி மூலம் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர். அதன் பிறகு மெரினா திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார்.
இந்த ஒரு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடி வீட்டு வாசல் கதவை தட்டியது அந்த வகையில் இவர் நடித்து வரும் பிரின்ஸ் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் வியாபாரம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அனுதிப் அவர்கள் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்திற்கு தமன் அவர்கள் இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு விருந்தாக வருகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பிரண்ட்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதாவது இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை டிஸ்னி பிரஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து 42 கோடி ரூபாய்க்கு பிரின்ஸ் திரைப்படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரின்ஸ் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 30 முதல் 40 கோடி மட்டும் தான் ஆனால் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை மட்டுமே 42 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அந்த வரிசையில் பிரின்ஸ் திரைப்படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.