தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் பிரின்ஸ் படத்தின் தோல்வியால் நடிகர் சிவகார்த்திகேயன் பல சிக்கல்களில் சிக்கி கொண்டு முழித்துகொட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக்கிய நிலையில் தற்போது பவீரன் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி நடைபெற்று வருகிறது.
மாவீரன் படத்தை தொடர்ந்து பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட அயலான் திரைப்படத்தை தற்போது தூசி தட்டி எடுத்துள்ளனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டது. ஆனால் இன்னும் 30 கோடி இருந்தால்தான் அயலான் படம் முடிவடையும் என கூறப்படுகிறது.
அதாவது பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட 90 கோடிக்கு மேல் செலவு செய்து உள்ளதாகவும் இன்னும் 30 கோடி இருந்தால் அயலான் திரைப்படம் முழுமையாக முடிவடைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.
பிரின்ஸ் படத்தின் தோல்வியால் வந்த விமர்சனத்தில் இருந்து மீளாத சிவகார்த்திகேயனுக்கு தலையில் இடியை தூக்கி போட்டது போல இன்னும் 30 கோடி இருந்தால்தான் அயலான் படம் முடிவடையும் என கூறியதும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகிறாராம்.
மாவீரன் படத்தில் பிசியாக இருந்து வரும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தையும் சரிக்கு சமமாக நகர்த்தி கொண்டு வருகிறார். இந்த நிலையில் மாவீரன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக அயலான் படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மாவீரன் 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாவீரன் படத்தை விட அயலான் படத்திற்காக தான் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாவீரன் படம் முடிந்தவுடன் அடுத்ததாக அயலான் படத்தை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.